சுவிட்சர்லாந்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றிற்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நான்கு மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் செயல்பட்டு வரும் பிரபலமான பல்கலைக்கழகம் ஒன்றிற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் அந்த கல்வி நிறுவனத்தின் தலைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 20 மாணவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த விசாரணையின் முடிவில் அந்த பல்கலைக்கழகத்தில் படித்து வந்த சிலி மற்றும் குரோஷியா நாட்டை சேர்ந்த இரண்டு பெண்கள், சுவிட்சர்லாந்தை சேர்ந்த இரண்டு ஆண்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குற்றத்தை ஒப்புக்கொண்டதால் காவல்துறையினர் அந்த 4 மாணவர்களையும் கைது செய்துள்ளனர். இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் குற்றத்தில் கைதான அந்த நான்கு மாணவர்களையும் முன் விசாரணை காவலில் வைக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதனையடுத்து இந்த நான்கு மாணவர்கள் மீதும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும், மேலும் அவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு நீக்கப்படுவார்கள், அதுமட்டுமின்றி கொலை மிரட்டல் விடுத்து குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவிக்கவும் மற்றும் பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும் என்று பலரும் கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.