Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பலத்த காற்று: 286 செல்போன் கோபுரங்கள் பாதிப்பு …!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதால், 286 செல்போன் கோபுரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |