Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த கார்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. கோவையில் பரபரப்பு…!!

3 கார்களில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் தனியாருக்கு சொந்தமான கார் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் 3 கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு காரின் முன் பகுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. சிறிது நேரத்தில் அருகில் இருந்த 2 கார்கள் மீதும் தீ வேகமாக பரவி அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கார்களில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறும்போது, காரின் முன்புற பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம். இதுகுறித்து விசாரணை நடத்தி தீ விபத்து ஏற்பட்டதற்கான உண்மை காரணம் கண்டறியப்படும் என தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |