Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த காட்டுத்தீ….. அதிர்ஷ்டவசமாக தப்பிய பஞ்சு மில்…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

பஞ்சு மில் அருகே இருக்கும் காட்டுப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தா. பேட்டை பகுதியில் தனியார் பஞ்சு மில் அமைந்துள்ளது. இந்த பஞ்சு மில் அருகில் இருக்கும் காட்டு பகுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் காற்றின் வேகத்தால் தீ அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பஞ்சு மில் விபத்தில் இருந்து தப்பியது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |