Categories
தேசிய செய்திகள்

பறவை மோதி என்ஜின் பழுதானதால்… அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்…135 பயணிகள் உயிர்த்தப்பினர்…!!!!!

கோழிக்கோட்டில் இருந்து 135 பயணிகளுடன் தில்லுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பறவை மோதி எஞ்சின் பழுதடைந்ததால் ஒரு நாள் முன்னதாக கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஏர் இந்தியா அதிகாரி பேசும்போது ஏர் இந்தியா விமானத்திலிருந்து 135 பயணிகளில் சில தங்கள் பயண சீட்டுகளை ரத்து செய்துவிட்டு இன்டிகோ விமானத்தில் சென்றுள்ளனர். மேலும் கண்ணூரில் இருந்து உணவகங்களில் தங்கி இருந்த சுமார் 85 பேர் தங்கள் பயணத்தை மீண்டும் திட்டமிட்டு இருக்கின்றார்கள்.

அதில் 24 பேர் நேற்று மற்றும் இன்று காலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் துபாய் மற்றும் பஹ்ரைனில் உள்ள அந்தந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றனர். மீதமுள்ள 61 உள்நாட்டு பயணிகள் இங்கு இருக்கின்றார்கள். இந்த நிலையில் விமானம் சரி செய்யப்பட்ட உடன் பயணிகள் அதே விமானத்தில் தில்லிக்கு அனுப்பப்படுகின்றார்கள். இதனைத் தொடர்ந்து தில்லியில் இருந்து ஏழு பொறியாளர்கள் இங்கு வந்ததாகவும் விமானத்தில் பறவை மோதிய இயந்திரங்களை ஆய்வு செய்து சரி செய்து வருவதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். மேலும் பழுது பார்க்கும் பணி முடிவடைந்ததும் விமானம் பறக்க தகுதியானதாக சான்றளிக்க பட்ட பின்னர் விமானம் புறப்படும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |