Categories
அரசியல்

பறவைகள் கூடாரமா மாறிட்டு…. எங்க கிட்ட விடுங்க பாத்துக்குறோம்… ஓபிஎஸ் வருத்தம்…!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் சிலையை பராமரிப்பதற்காக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென முதல் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையாவது, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற தன் வாழ்வையே அர்பணித்துள்ளார், இவரை கவுரவிக்கும் வகையில் ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல சிலையானது சென்னை காமராஜர் சாலையிலுள்ள மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் 28.1.2021 அன்று திறந்து வைத்ததுடன் அந்த வளாகத்திற்கு ‘அம்மா வளாகம்’ என்ற பெயரும் சூட்டப்பட்டு இருந்தது.

ஜெயலலிதாவின் இந்த சிலையானது அதிமுகவானது  ஆட்சியில் இந்த வரையில் நன்முறையில் பாதுகாக்கப்பட்டு வந்தது. தற்பொழுது ஆட்சி மாறிய நிலையில் அரசாங்கமானது  இந்த சிலைக்கு சரிவர பராமரிப்பு பணிகள் நடத்தப்படவில்லை.ஜெயலலிதாவின் சிலையானது  உயர்கல்வி மன்ற வளாகத்திற்குள் கம்பிவேலி அமைக்கப்பட்டு இருப்பதால் மாநகராட்சி பணியாளர்களால் சரிவர பராமரிக்க இயலாத நிலை உள்ளது. மேலும் பறவைகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது.

அங்கு அமைக்கப்பட்டுள்ள ஒளி விளக்குகளும்  பழுதடைந்துள்ளது. எனவே பொது நலத் துறை முதன்மை பொருளாளருக்கும், தொழில் நுட்ப கல்வி ஆணையருக்கும்‌ அதிமுக சார்பில் சிலையை நன்கு பராமரிக்கவும், பழுதடைந்த ஒளி விளக்குகளை மாற்றமும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கையும் விடப்பட்டுள்ளன. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பாரா முகம் பார்க்காமல், மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலிதாவின் சிலையை பராமரிக்க தொடர்புடைய அதிகாரிகளுக்கு ஆணையிட வேண்டும். இல்லையேல் சிலையை பராமரிக்கும் பணியை அதிமுகவிடமே ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |