Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பறக்க முடியாமல் தவித்த மயில்…. சமூக ஆர்வலர்கள் அளித்த தகவல்…. வனத்துறையினரின் செயல்….!!!!

படுகாயமடைந்த மயில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சங்காடு  பகுதியில் பெண் மயில் ஒன்று காயங்களுடன்  பறக்க முடியாமல் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர் ராஜ்குமார், முகமது ஆகியோர்  உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த  தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  வனத்துறையினர் படுகாயமடைந்த மயிலை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மயில்  பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதனையடுத்து வனத்துறையினர் அந்த மயிலை வனகாப்பாளரிடம்  ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |