எத்தியோப்பியாவில் நிலவும் வரட்சியின் காரணமாக 70 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
சோமாலி மாநிலத்தில் பருவ மழை பெய்யாத காரணத்தினால் உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் பத்து லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளது. மேலும் அங்கு வசிக்கும் 80 சதவிகித மக்களின் வாழ்வாதாரம் கால்நடைகளை சார்ந்து இருப்பதால் ஏராளமானோர் அரசு வழங்கும் உணவு மற்றும் குடிநீர் முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அவ்வாறு குடியேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அங்கும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி இருக்கிறது.