நெல்லை வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரில் வசித்து வருபவர் தங்கராசு. நாட்டுப்புற கலைஞர் தங்கராசு கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக கோவில் விழாக்கள் உள்ளிட்டவற்றில் பெண் வேடமிட்டு கரகாட்டம் ஆடி வருகிறார். கரகாட்ட நிகழ்ச்சிகள் இல்லாத காலங்களில் வெள்ளரி தோட்டத்தில் இரவு காவலாளியாக பணியாற்றுகிறார். பரியேறும் பெருமாள் படத்தில் நடித்தவர் இவர்.இவரது வீடு மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததை அறிந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாவட்ட நிர்வாகம் சார்பாக தங்குவதற்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார். மேலும் அவரின் மகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தற்காலிக வேலையும், நலிந்த கலைஞர்களுக்கு உதவி தொகை 3000 ரூபாய் கிடைக்கவும் ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
Categories
“பரியேறும் பெருமாள்” தங்கராசுவுக்கு சொந்த வீடு…. ஆட்சியர் அதிரடி….. !!!!
