பாஜகவைச் சேர்ந்த கே.டி ராகவன் தன்னுடைய செல்போனில் ஆபாச வீடியோ சாட்டிங் செய்த வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் பரபரப்பாகியுள்ளது. இதையடுத்து பாஜகவில் உள்ள பெண் தலைவர்களான வானதி சீனிவாசன், காயத்ரி ரகுராம், குஷ்பூ போன்றவர்கள் கருத்து தெரிவிக்காதது குறித்து பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் காயத்ரி ரகுராம், பெயர் குறிப்பிடாமல் சட்டம் என்பது அனைவருக்கும் சமம். தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நெட்டிசன் ஒருவர், ட்விட்டரில் குஷ்புவின் ஐடியை குறிப்பிட்டு பாஜக பெண் தொண்டர்கள் நிலை உண்மையாகவே பரிதாபத்திற்குரிய நிலையில் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த குஷ்பு, பாஜக கட்சியை சேர்ந்த பெண்கள் யாராவது யார் மீதாவது பாலியல் குற்றச்சாட்டை கூறினார்களா? என்று கேள்வி எழுப்பினார். கட்சி சார்ந்து மட்டுமல்லாமல் எந்த பெண்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.