டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள மதிரெட்டிபட்டி பகுதியில் விவசாயியான குழந்தைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அஸ்வின் என்ற மகனும், காவியா என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக அஸ்வினுக்கு கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அமுதா தனது மகனை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
அங்கு சிறுவனை பரிசோதித்து பார்த்த போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அஸ்வினை மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அஸ்வின் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.