கனடாவில் உருமாறிய கொரனோ வைரஸ் இளம் வயதினரை அதிகம் பாதிப்பதாக பொது சுகாதார அதிகாரி தெரேசா டாம் தகவல் தெரிவித்துள்ளார்.
கனடாவில் உருமாறிய கொரோனாவான சார்ஸ் கோவிட் – 2 என்ற வைரஸின் பரவல் நாளுக்கு நாள் அதிகாரித்து கொன்டே வருகின்றது. இந்த வகை கொரோனா வைரஸ் 20 முதல் 39 வயது வரை இருப்பவர்களை தான் அதிகம் பாதிக்கின்றது. இந்நிலையில் கொரோனா தொற்று நோயால் அந்நாட்டில் இதுவரை 9,44,962 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 8,85,604 பேர் குணமடைந்துள்ளதாகவும், மேலும் 22,754 பேர் இறந்துள்ளதாகவும், சுமார் 36,310 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், கடந்த புதன்கிழமை மட்டும் புதிய கொரோனா வைரசால் 2,643 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரி தெரேசா டாம் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது “சீனாவிலிருந்து பரவிய கொரோனா தொற்று வயதானவர்களை தான் அதிகம் பாதித்துள்ளது. ஆனால் தற்போது உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸால் இளம் வயதினர் தான் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். ஏனெனில் அவர்கள் யாரும் தனி மனித இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியமாக இருக்கின்றனர். இதனால் தான் 20 முதல் 30 வயதுடையவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறியுள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்க வேண்டும் அப்போதுதான் நாம் அனைவரும் இதிலிருந்து மீள முடியும் என்று அவர் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.