கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இங்கு அதிகபட்சமாக 58 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. மேலும் அங்கு பலத்த காற்று வீசியது.
இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. அதன்பின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் சிரமத்தில் உள்ளனர். எனவே மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.