Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு….! முன்னாள் முதலமைச்சர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து….. மீட்ட மீனவர்கள்….!!!!

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் சோம்பல்லி கிராமத்திற்கு சென்றார். கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் அதனை பொருட்படுத்தாமல், படகு மூலம் சென்றபோது, ​​எதிர்பாராதவிதமாக படகு தண்ணீரில் கவிழ்ந்தது.

இதனால் படகில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தண்ணீரில் மூழ்கினர். இதில் சந்திரபாபு நாயுடுவும் நிலை தவறி நீரில் விழுந்தார். இதனை கவனித்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஆற்றில் குதித்து, அனைவரையும் மீட்டனர். இதனால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |