Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!….. பற்றி எரிந்த கன்டெய்னர் லாரி …. 1கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்ள்கள் சேதம்….!!!!!!

லாரியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போலிவாக்கம் பகுதியில் பொருட்களை ஆன்லைன்  மூலம் விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் பொருட்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர்-பூந்தமல்லி சாலையில் லாரி  சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி தீப்பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை பார்த்த லாரி ஓட்டுனர் லாரியை  அங்கேயே நிறுத்திவிட்டு கீழே குதித்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி லாரியில் பற்றி எரிந்த தீயை அனைத்தனர். இந்த விபத்தில் லாரியில் இருந்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன், தாலுகா இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளனர்.

Categories

Tech |