சூர்யா 42 திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா வணங்கான், வாடிவாசல் போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்து வருகின்றார். மேலும் சிறுத்தை சிவா இயக்குகின்ற புதிய திரைப்படம் ஒன்றிலும் நடிக்கின்றார். இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 42 என பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் சேர்ந்து தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கின்றார்.
இத்திரைப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பாட்னி கதாநாயகியாக நடிக்க ஆனந்தராஜ், கோவை சரளா, கிங்ஸ்லி, யோகி பாபு உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். அண்மையில் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து போட்டோ ஒன்று இணையத்தில் கசிந்து இருக்கின்றது. அந்த போட்டோவில் கதாநாயகி திஷா பாட்டினியுடன் இயக்குனர் சிவா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கின்றார்.