Categories
மாநில செய்திகள்

பயோமெட்ரிக் முறையில் முக்கிய மாற்றம்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…!!!!

நியாயவிலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட சமையல் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு ரேஷன் கடைகளில் மக்கள் பொருட்களை வாங்குவதற்கு பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படுகிறது. கைவிரல் ரேகை பதிவு செய்து பொருட்களை மக்கள் வாங்கி வருகிறார்கள். சில நேரம் கைரேகை சரியாக பதிவாகவில்லை என்ற புகார்கள் எழுந்து வருகிறது.

எனவே ரேஷன் அட்டைதாரர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த நேரங்களில் ரேஷன் கடைகளில் உள்ள முக்கியமான நோட்டுகளில் கையெழுத்திட்டு பொருட்களை வாங்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நியாயவிலை கடைகளில் கண் கருவிழி சரிபார்க்கும் முறை முன்னோட்ட திட்டமாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் முதற்கட்டமாக நகரப்பகுதிகளில் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் என்றும், இப்போது சோதனையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |