Categories
சினிமா தமிழ் சினிமா

“பயிற்சி கொடுங்கன்னு சொல்லிட்டு போயிட்டாரு”…. நடிகையின் மனதை காயப்படுத்திய பிரபுதேவா…. பேட்டியில் உருக்கம்….!!!!

தமிழ் சினிமாவில் 1990-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மதுபாலா. இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மதுபாலா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, முன்பெல்லாம் திருமணம் ஆன நடிகைகள் நடிக்க முடியாது. ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. எனக்கு நடிகை ஹேம மாலினியை பார்த்து தான் நடிப்பதற்கு ஆசை வந்தது. அதன் பிறகு கே. பாலச்சந்தர் மற்றும் மணிரத்தினம் ஆகியோரால் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

மிஸ்டர் ரோமியோ படத்தின் பாடல் காட்சி ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது பிரபுதேவா  நான் அவருடன் நடனமாட முடியாது என்று நினைத்து அவருடைய உதவியாளர்கள் மூலம் எனக்கு பயிற்சி கொடுக்க சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதனால் எனக்கு 2 மணி நேரம் பயிற்சி கொடுத்து அதன் பின் பாடலை எடுத்தனர். இந்த சம்பவம் எனக்கு ஈகோவை தூண்டியது. எனக்கு நடனம் வராதா? பயிற்சி கொடுத்தால் மட்டும்தான் இவருடன் சேர்ந்து ஆட முடியுமா? என்றெல்லாம் தோன்றியது. என்னால் அவரோடு போட்டி போட முடியாது என்பது உண்மைதான். இருப்பினும் அந்த சம்பவம் என்னுடைய மனதை மிகவும் காயப்படுத்தியது. மேலும் பெண்கள் அடிபணிவது மற்றும் விட்டுக் கொடுப்பது வேறு. ஆனால் எதற்காக விட்டுக் கொடுக்கிறோம் என்பது மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |