Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பயிற்சிக்கு வந்து ஒரு வாரம் தான் ஆகுது..! சிவகங்கையில் பரபரப்பு புகார்… போலீஸ் விசாரணை..!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இந்தோ-திபெத் பயிற்சி மையத்திலிருந்து திடீரென காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள பூவந்தி காவல் சரகத்தில் இலுப்பக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் புதிதாக கர்நாடகம் மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டத்தை சேர்ந்த சந்திரஹாசா என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஒரு வாரத்திற்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி ஒரு வாரமாக காவல்துறை பயிற்சி பெற்ற அவரை திடீரென காணவில்லை. இதுகுறித்து இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையிலிருந்து பூவந்தி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |