Categories
மாநில செய்திகள்

பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் – ராமதாஸ் கோரிக்கை…!!!

திருப்பூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தான் பெற்ற பயிர்க் கடனை அடைக்காததன் காரணமாக அவருடைய வங்கி கணக்கை பொதுத்துறை வங்கி முடக்கியது. இந்நிலையில் அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது தன்னுடைய மருத்துவத்துக்கு 75 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டுள்ளது. ஆனால் வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் பணத்தை எடுக்கமுடியாமல் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தனக்கு வேதனை அளிப்பதாக கூறிய ராமதாஸ், பயிர் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், உயிரிழந்த விவசாயினுடைய குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |