வேலூர் மாநகராட்சி மாமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கடுமையாக இருந்தது குற்றங்கள் மற்றும் வழிப்பறி சம்பவங்கள் கணிசமான அளவில் குறைந்திருந்தன. ஆனால் தற்போது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நடுநிலை தன்மையுடன் செயல்பட முடியவில்லை. அதோடு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
வேலூரில் திமுகவினரால் அதிமுக வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இவ்வாறாக அதிமுகவினரின் அராஜகம் தற்போது தலைதூக்கி ஆடி வருகிறது. திமுகவினர் அதிமுகவினரை மிரட்டி வருகின்றனர். ஆனால் நாங்கள் ஒருபோதும் பயப்பட மாட்டோம் பயந்து வாழ வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பொங்கல் பரிசு தொகுப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தற்போது திமுகவினர் தான் பயந்து ஒளிந்து ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஸ்டாலின் ஒரு விளம்பரப் பிரியர். அவரை நாம் தினமும் டிவியில் பார்க்கலாம் 4 கடைகளுக்கு செல்வார் டீ குடிப்பார் சைக்கிள் ஓட்டுவார். ஒர்க்அவுட் செய்வார். மற்றபடி தமிழக மக்களின் நலன் குறித்து அவருக்கு எந்த கவலையும் கிடையாது. வாய் ஜாலங்களை வைத்தே போய் பேசி போய் பேசி ஆட்சியை பிடித்து விட்டார் ஸ்டாலின் என அவர் கூறியுள்ளார்.