திமுக தலைவர் ஸ்டாலின் இது பெரிய பயம் வந்து விட்டதால் ஆன்மீகம் பற்றி பேசுவதாக பாஜக தலைவர் முருகன் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனை அடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அனைத்து கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இதனையடுத்து கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் ஆன்மீக அரசியல் செய்யப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஆன்மீகத்தை காரணம் காட்டி திமுகவை நிறுத்தலாம் என சிலர் நினைக்கின்றனர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். ஏழைகளை காக்க கூடியவர்கள் தான் உண்மையில் ஆன்மீகத்தை நேசிப்பவர்கள். மேலும் ஏழைகள் முன்னேற்றத்திற்கு உருவாக்கப்பட்ட கட்சிதான் திமுக. திமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்டாலின் கூறிய கருத்து பற்றி விமர்சித்துள்ள தமிழக பாஜக தலைவர் முருகன் கூறுகையில், “ஸ்டாலினுக்கு பெரிய பயம் வந்து விட்டதால் ஆன்மீகம் விவேகானந்தர் பற்றி பேசுகிறார். கடவுள் இல்லை என்று சொன்னால் மக்கள் ஓட்டுப் போட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு தெரிந்துவிட்டது. அதனால்தான் இப்படி பேசுகிறார். மேலும் நாடாளுமன்ற கட்டிடம் அத்தியாவசியமானது. கட்டிடம் கட்ட தேவையுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.