திருவாடானை பகுதியில் பள்ளி நேரத்தில் டிப்பர் லாரிகளை விட வேண்டாம் என்று பள்ளி மாணவன் CM ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், நாங்கள் செல்லும் பள்ளி நேரத்தில் காலை, மாலையில் இங்கு டிப்பர் லாரிகள் அதிவேகமாக செல்கின்றன. சாலையில் செல்லவே பயமாக இருக்கிறது. இதனால், முதலமைச்சர் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
சமீப காலமாகவே பள்ளி குழந்தைகள் இது போன்ற பெரிய வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் ஒரு சில பகுதிகளில் அரங்கேறி வருகிறது. எனவே இந்த விஷயத்தில் முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.