Categories
மாநில செய்திகள்

“மக்களே பயப்படாம போட்டுக்கோங்க” தடுப்பூசி போட்டுக்கொண்ட…. அமைச்சர் விஜயபாஸ்கர்…!!

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் அரசு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து தடுப்பூசி போட்ட பிறகு ஒருசிலர் உயிரிழந்துள்ளதால் மக்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை 9 மணிக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

அதன்படி இன்று காலை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் விஜயபாஸ்கர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். தடுப்பூசி போட்டுக் கொள்ளும் முன்பு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த  விஜயபாஸ்கர், “ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று காலை 9 மணிக்கு தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இருப்பதாகவும், சுகாதார பணியாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும், ஒரு மருத்துவராகவும் இதை செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |