Samsung நிறுவனம் பயனர் விவரங்கள் இணையத்தில் லீக்கான விவகாரத்தில் வெளிப்படையாக பதில் அளித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த சைபர் செக்யுரிட்டி சம்பவத்தில் Samsung பயனர் விவரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது தனிப்பட்ட தகவல்களான பிறந்த, பிறந்த தேதி மற்றும் இதிர விவரங்கள் இணையத்தில் வெளியாகின. எனினும், மிக முக்கிய தகவல்களான கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு விவரங்கள் பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பயனர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை துவங்கி விட்டதாக Samsung நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து Samsung நிறுவனம் கூறியதாவது, “Samsung-ஐ பொருத்தவரை பாதுகாப்புக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
நாங்கள் சமீபத்தில் சைபர் செக்யுரிட்டி சம்பவத்தை கண்டறிந்து இருக்கிறோம். இதில் பயனர் விவரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 2022, Samsung அமெரிக்க சிஸ்டம்களில் இருந்து தகவல்களை இயக்கி இருக்கின்றன. ஆகஸ்ட் 4, 2022 சில பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தோம்,” என Samsung தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிஸ்டம்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் துவங்கி விட்டதாகவும், இந்த விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள சைபர்செக்யுரிட்டி நிறுவனம் ஒன்றை நியமித்துள்ளதாகவும் Samsung நிறுவனம் தெரிவித்துள்ளது.