Categories
அரசியல் மாநில செய்திகள்

பயந்துட்டேனு சொல்லுவீங்க…! 1இல்ல… 2இல்ல… 12,800 வார்டில் போட்டி… அதிரடி காட்டும் அமமுக …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 12,800 வார்டில் போட்டியிட வேண்டும் என்று தான், எங்களுடைய வேட்பாளர் தேர்வு நடைபெற்றுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிடுகிறது.
சென்னைக்கு  பெண் மேயராக வருவது நல்லது தானே.

நான் என்ன நினைத்தேன் என்றால்…. தமிழ்நாடு அரசு தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உச்சநீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், இப்போது தான் ஓமிக்கிறான் கொஞ்சம் கொஞ்சமாக செட்டில் ஆகும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்,  பிப்ரவரி மாதம் நார்மலாக வாய்ப்பிருக்கிறது என்று… ஆனால் தொற்றை அதிகரிக்க வாய்ப்புள்ளது போல இப்போதே அறிவித்திருக்கிறார்கள்.

ஒரு மாதம் தள்ளி வைக்கலாமே, நாங்க மார்ச்சில் தேர்தல் நடத்துகின்றோம். பிப்ரவரியில் கடைசியில்  நாமினேசன்  என்று கூட இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டில் சொல்லலாமே.. தமிழ்நாடு முழுவதும் தெரியும் பேரூராட்சி,  மாநகராட்சியில், தெருத்தெருவா மூணு பேரும் போகலாம், நாலு பேர் போலாம் சரி…  இது ஓமிக்கிறானை அதிகப்படுத்துமோ என்ற அச்சம் இருக்கு. இருந்தாலும் தேர்தலில் போட்டி இடவில்லை என்றால் பயந்துகிட்டு போட்டியிடவில்லை என்று சொல்லுவாங்க.

நீங்களே கேட்பீங்க. அதனாலதான் எனக்கு மனசில தேர்தலை ஒரு மாசம் தள்ளி அறிவித்திருக்கலாம் என்ற எண்ணம் இருக்கு. இருந்தாலும் தேர்தலில் போட்டியிட தமிழ்நாடு முழுவதும் நாங்கள் எல்லா மட்டத்திலும், எங்களுடைய தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் எல்லாம் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வில் இருந்தார்கள், நாமினேசன் தொடங்கிவிட்டது என தெரிவித்தார்.

Categories

Tech |