டெல்லி இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புனே செல்ல தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவர் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகவும், சோதனை முடிவுகள் தற்போது தான் கிடைத்ததாகவும் விமான குழுவினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த விமான குழுவினர் புறப்பட தயாரான விமானத்தை நிறுத்திவிட்டு அந்த பயணியை விமான நிலைய மருத்துவ குழுவினரிடம் அழைத்து சென்றுள்ளனர்.
அதுமட்டுமின்றி விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளையும் கீழே இறக்கிவிட்டு விமானம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து உள்ளனர். அதன் பின்னரே பயணிகள் அனைவரையும் ஏற்றிக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.