Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயணியை நடுவழியில் இறக்கி விட்டதால்…. பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்…. போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு….!!

பேருந்து நிறுத்தத்தில் நிற்க மறுத்த தனியார் பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோட்டில் இருந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வெண்ணந்தூர் அருகே வெள்ளை பிள்ளையார் கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து ஏறிய பயணி மடம் பேருந்து நிறுத்தம் வரை டிக்கெட் கேட்டுள்ளார். ஆனால் நடத்துனர் மடம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து நிற்காது என கூறி அந்த பயணியை நடுவழியிலேயே இறக்கி விட்டார். இதனையடுத்து ஆத்திரமடைந்த மடம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த பேருந்து ராசிபுரத்தில் இருந்து மீண்டும் ஈரோடுக்கு திரும்பிய நிலையில் மடம் பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மடம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காததை கண்டித்து ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெண்ணந்தூர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.

Categories

Tech |