இண்டிகோ ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இண்டிகோ ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தில்லி மற்றும் மும்பையில் உள்ள விமான நிலையங்களில் நாளுக்கு நாள் பயணிகளின் கூட்டம் அதிகரிக்கிறது. இதனால் அனைத்து சோதனைகளையும் நிறைவு செய்ய பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
எனவே இனிவரும் காலங்களில் உள்நாட்டுப் பயணிகள் தங்கள் விமானம் புறப்படுவதற்கு இரண்டரை மணி நேரத்திற்கு முன்பும், சர்வதேச அளவில் விமானத்தில் செல்லும் பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்பும் வரவேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.