கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு படிப் படியாக குறைந்ததால் மீண்டும் சென்னையில் ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அரசு விடுமுறை நாட்களில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படுகிறது.
அந்த வகையில் நாளை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தேசிய விடுமுறை நாளான அன்று மூர்மார்க்கெட்-அரக்கோணம், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை-வேளச்சேரி, கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயங்கும் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று தெரிவித்துள்ளது.