Categories
மாநில செய்திகள்

பயணிகளிடம் ஒழுங்கீனமா? கவனமா நடந்துக்கங்க …. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை தவிர்ப்பதற்கு போக்குவரத்து துறை மேலாண் இயக்குனர் அனைத்து மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், தமிழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின்போது பயணிகளிடம் மரியாதையுடனும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். பேருந்தின் பழுதுகளை சரி செய்து சரியான நேரப்படி நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்று இறக்கிச் செல்ல வேண்டும். மேலும் நிர்ணயிக்கப்பட்ட சரியான பயண கட்டணங்களை பயணிகளிடம் உரிய பயணச்சீட்டு அழித்து வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |