Categories
உலக செய்திகள்

பயங்கரவாத தடுப்பு சட்டம் ரத்து?…. பிரபல நாடு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!!!

இலங்கை நாட்டில் சென்ற 1979 ஆம் வருடம் முதல் பயங்கரவாத தடுப்பு சட்டம் (பி.டி.ஏ.) நடைமுறையில் இருக்கிறது. அதாவது நாட்டின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தில் கடுமையான பிரிவுகள் இருக்கிறது. இந்த சட்டத்துக்கு உலகநாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 3 மாணவர்கள் மீது இச்சட்டம் பாய்ந்துள்ளது. சென்ற 18-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதற்கிடையில் அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது பி.டி.ஏ. சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பதற்கு இலங்கை பார் கவுன்சில் கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, பி.டி.ஏ. ஆகிய சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு எதிரான சட்டங்கள் இலங்கையில் ஜனநாயகத்தை சிதைக்கிறது என குற்றம் சாட்டியுள்ளது.

மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையை நிலைநிறுத்துமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்வதாக அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் தெரிவித்தார். இதேப்போன்று பயங்கரவாத தடுப்பு சட்டத்தை திரும்பப் பெறுமாறு கடந்த வருடமே ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் இலங்கைக்கு அறிவுறுத்தியிருந்தது. மேலும் இலங்கை நாட்டுக்கு எதிராக ஏற்றுமதிக்கான தடைகளை விதிப்பது தொடர்பாக பரிசீலிக்கவும் முடிவு செய்திருந்தது.

அவ்வாறு இலங்கையின் பி.டி.ஏ. சட்டத்துக்கு சர்வேதச அளவில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மேற்படி சட்டத்தை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது. இது பற்றி இலங்கை மந்திரியும், கேபினட் செய்தி தொடர்பாளருமான பந்துல குணவர்தனே கூறியதாவது “1979 ம் வருடம் முதல் பி.டி.ஏ. நடைமுறையில் இருக்கிறது. இந்த சட்டத்திலுள்ள விரும்பத்தகாத பகுதிகளை நீக்கிவிட்டு ஒரு புது தேசிய பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்படும் என்று சட்டத்துறை மந்திரி மந்திரிசபை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்” என அவர் கூறினார். இதன் வாயிலாக 40 வருடங்கள் பழமையான இலங்கையின் கொடூர பயங்கரவாத தடுப்பு சட்டம் முடிவுக்கு வருகிறது.

Categories

Tech |