தேசிய பாதுகாப்பு படையின் 37வது கொண்டாட்டம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரியானா மாநிலம் என்எஸ்ஜியின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பயங்கரவாதியாக துப்பாக்கியுடன் வரும் ஒரு வீரரை இரண்டு மோப்ப நாய்கள் சேர்ந்து மடக்கிப்பிடித்து தாக்குகின்றன. தங்களது வீரத்தையும் சேவையும் நாட்டுக்கு பறைசாற்றும் வகையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி செய்யப்பட்டதாக எண்ணி பெருமிதம் தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு படையினர் கடத்தல் எதிர்ப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, பணயக்கைதிகள் மீட்பு மற்றும் பிற “சிறப்பு” நடவடிக்கைகளுக்கான இந்தியாவின் சிறப்பு படையாக செயல்பட்டு வருகின்றது. என்எஸ்ஜி கமாண்டோக்கள் இசட்-பிளஸ் நிலை மற்றும் இசட்-நிலை பாதுகாப்பு கொண்ட நபர்களுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இசட் பிளஸ் 36 பணியாளர்களின் பாதுகாப்பு உள்ளடக்கியது. அதே நேரத்தில் இசட்-லெவல் 22 பணியாளர்களை உள்ளடக்கியது. பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலருக்கும் பாதுகாப்பு அளிப்பதில் இந்த குழு முக்கிய பங்காற்றுகிறது.