காஷ்மீரில் பயங்கரவாதி உடன் தொடர்பில் இருந்த நபரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதுவும் முக்கியமாக இந்து மற்றும் சீக்கிய மதத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பயங்கரவாதிகள் பலரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டம் கிட்சமா என்ற பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது லக்ஷர் ஈ தொய்பா பயங்கரவாதிகள் தொடர்பில் இருந்த பருக் அஹமது மாலிக் என்பவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கையெறி குண்டு, துப்பாக்கி தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.