Categories
தேசிய செய்திகள்

பயங்கரம்! என்னை எதுக்கு இப்படி அடிச்சாங்கன்னு தெரியல?… பெண் பரபரப்பு புகார்…. வெளியான பகீர் வீடியோ….!!!!

4 பெண்கள் சேர்ந்துகொண்டு ஒரு பெண்ணை கொடூரமாக தாக்கி இருப்பதாக மத்தியபிரதேசத்தின் இந்தூர் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தூரில் ஒரு பெண்ணை கீழே தள்ளிவிட்டு, பெல்ட்டை வைத்து அடிக்கும் வீடியோவானது வைரலாகியது. இச்சம்பவம் நவ. 4ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கும் பெண்கள் குடி போதையில் இருந்ததாக தெரிகிறது.

அந்த 4 பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் முடியை பிடித்து இழுத்து, முகத்தில் குத்தியும், காலால் மிதித்தும் பயங்கரமாக தாக்கினர். எனினும் அங்கிருந்தவர்கள் பெண்ணை தாக்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதாவது, தன்னை எதற்காக அவர்கள் அடித்தார்கள் என்று தெரியவில்லை என புகாரில் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் ஆபாசமான செயல், வேண்டுமென்றே பிறரை காயப்படுத்துதல் உள்ளிட்ட வழக்குகளை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது பதிந்துள்ளனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண் இந்தூரிலுள்ள பூச்சி மருந்து கடையில், விற்பனையாளராக பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |