பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவின் லக்கி மார்வாட்டில் நேற்று பயங்கரவாத தாக்குதல் சம்பவம்நடைபெற்றுள்ளது. இதில் போலீசார் 6 பேர் உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பயங்கரவாதிகள் வேன் மீது துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா போலீசார் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் பற்றி தலைமை செயலாளர் மற்றும் கைபர் பக்துன்க்வா ஐஜியிடம் அறிக்கை கேட்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். இது பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியபோது, பயங்கரவாதம் பாகிஸ்தானின் முதன்மையான பிரச்சினைகளில் ஒன்றாக விளங்குகிறது. நம்முடைய ஆயுதப்படைகளும், காவல்துறையினரும் வீரத்துடன் போராடி வருகின்றார்கள். லக்கி மார்வாட்டில் நடைபெற்ற இந்த தாக்குதலை கண்டிக்க வார்த்தைகள் போதாது என அவர் தெரிவித்துள்ளார்.