மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏந்தூர் புது காலனி மாரியம்மன் கோவில் தெருவில் சுப்பராயன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டி.புதுப்பாக்கம் பகுதியில் இருக்கும் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் நோக்கி வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் முதியவர் மீது மோதியது.
இதனால் படுகாயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சுப்பராயன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.