மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தம்பாளையம் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விக்னேஷூக்கு கவுசல்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விக்னேஷ் வேலை முடிந்து உலகபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விக்னேஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.