Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சீலப்பாடி எம்.ஜி.ஆர் நகரில் வசந்த பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி யாழினி என்ற மனைவியும், 2 1/2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் வசந்த பாண்டி தனது நண்பரான பிரகாஷ்ராஜ் என்பவருடன் திண்டுக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சந்தன வர்த்தினி ஆற்று பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த 2 வாலிபர்களையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |