லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான நிலையில், வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள தில்லைநாயகபுரம் திருவள்ளூவர் தெருவில் கட்டிட தொழிலாளியான ராஜ் கண்ணன்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜி(23) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். தற்போது கோவை மாவட்டத்தில் இருக்கும் சிங்கையன் புதூர் பகுதியில் ராஜ் கண்ணன் தங்கியிருந்து கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜ் கண்ணன் தனது நண்பரான கோபு என்பவருடன் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் அவர்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர்.
இதனையடுத்து காதறுத்தான் மேடு பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் நின்ற லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜ் கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்thuவிட்டார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோபுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.