கட்டுப்பாட்டை இழந்த கிரேன் சுவர் மீது மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் ஊட்டியில் கிரேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பேச்சிமுத்து நேற்று மாலை கிரேனில் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் கொட்டக்கம்பை அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கிரேன் சாலையோரம் இருந்த சுவர் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பேச்சிமுத்துவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.