மொபட் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள சில்வார்பட்டியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது நண்பர்களான நாகராஜ், சண்முகம் ஆகியோருடன் மொபட்டில் தேவதானபட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பெரியகுளம்-வத்தலக்குண்டு பைபாஸ் சாலை அருகே சென்றபோது பின்னால் வந்து கொண்டிருந்த கார் மொபட் மீது மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் மொபட்டில் இருந்த 3 பெரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ரவி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது நாகராஜ் மற்றும் சண்முகத்திற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.