லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேல்நல்லாத்தூரில் மோனேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்த வேலை காரணமாக காரில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஆவட்டி கூட்டுரோடு அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் பின்னால் வேகமாக வந்த கார் லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மோனேஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மோனேஷ் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.