Categories
கிரிக்கெட் விளையாட்டு

பன்றி, மாட்டிறைச்சிக்கு தடை…. பிசிசிஐ பதற்றத்துடன் விளக்கம்….!!!!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என பிசிசிஐ அறிவித்ததாக நேற்று செய்திகள் வெளியானது. இந்த இறைச்சியை எவ்விதமான உணவு வடிவிலும் சாப்பிடக்கூடாது. ஹலால் இறைச்சிகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என வீரர்களுக்கு பிசிசிஐ கட்டுப்பாடுகள் விதித்ததாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து வீரர்களின் உணவு பழக்கங்களில் பிசிசிஐ எப்படி தலையிடலாம் என சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் இதற்கு பிசிசிஐ தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, வீரர்களின் உணவுக் குறிப்பு குறித்து எவ்வித விவாதமும் ஏற்படவில்லை. உணவு தொடர்பாக எதையும் கூறி வீரர்களை கட்டாயப்படுத்த மாட்டோம். உணவு சாப்பிடுவதில் வீரர்களே முடிவு எடுத்துக் கொள்வார்கள். அதில் பிசிசிஐ ஒருபோதும் தலையிடாது. அவர்கள் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பது பற்றி எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. சமூக வலைத்தளத்தில் வெளியான தகவல் உண்மையில்லை என்று பிசிசிஐ விளக்கமளித்துள்ளது.

Categories

Tech |