Categories
உலக செய்திகள்

“பனி மூட்டத்துல” ஒன்னுமே தெரியல…. திடீரென நடந்த சோகம்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

எகிப்தில் பனி மூட்டத்தின் காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த 2 பஸ்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் சிக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.

வடகிழக்கு எகிப்தில் சினாய் என்னும் சர்வதேச நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 2 பஸ்கள் பனிமூட்டம் காரணமாக ஒன்றோடொன்று மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் சிக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இது குறித்து கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 13 ஆம்புலன்ஸ்கள் விபத்தில் சிக்கிய பயணிகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |