Categories
உலக செய்திகள்

பனி சறுக்கை பார்க்கணும்…. ஆசையுடன் ஹெலிகாப்டரில் ஏறிய சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

அமெரிக்காவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அங்கோரேஜ் என்ற இடத்தில் உள்ள பனி படர்ந்த பகுதியினை கண்டு ரசிப்பதற்காக மூன்று சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் ஏற்படும் பனி சறுக்கை பார்பதற்க்காக இரண்டு வழிகாட்டிகளை அழைத்துக்கொண்டு அங்குள்ள ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த ஹெலிகாப்டர் நிக் பனிப்பாறையின் அருகே சென்றுகொண்டிருக்கும் போது திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்றது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனது.

Categories

Tech |