Categories
தேசிய செய்திகள்

பனிக்காலங்களில் ரயில் விபத்தை தடுக்க… இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு… என்ன தெரியுமா…?

நாட்டின் பல்வேறு பகுதிகளில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் காணப்படும் மூடு பனியின் காரணமாக ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “விபத்து ஏற்படுத்துவதை தடுப்பது மற்றும் ரயில் சேவையின் கால தாமதத்தை குறைப்பது போன்றவற்றில் தனி கவனம் செலுத்தப்படும்.

இதற்காக பனிப்படர்வை நீக்கும் கருவிகளை ரயில் இன்ஜின்களில் பொருத்துவது மற்றும் அதிக ஒலி எழுப்பக்கூடிய கருவிகளை பொருத்துவது, தண்டவாளங்களுக்கு அருகே வெள்ளை நிற கோடுகளை போடுவது போன்றவை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் சிக்மா வடிவிலான சிக்னல் அமைப்பது, லெவல் கிராசிங் பகுதிகளில் விசில் எழுப்பக்கூடிய கருவிகள் மற்றும் எல்.இ.டி பல்புகளை பொருத்துதல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ரயில்களை 60 கிலோமீட்டரிலிருந்து 75 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது”  என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |