விராட் கோலி நெட்ஸில் பயிற்சியின் போது ரசிகர்களிடம் பேச வேண்டாம் என்று கூறிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்து விட்டது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று (22ஆம் தேதி) முதல் பிரதான சூப்பர் 12 சுற்றுப்போட்டி தொடங்குகிறது.. இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதில் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. அதன்பின் மாலை 4:30 மணிக்கு இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது.. தொடர்ந்து அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை 23ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையே இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் உட்பட அனைத்து நாட்டு அணியினரும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியினரும் தொடர் பயிற்சி ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிங் கோலியும் பயிற்சி செய்தார்.
அப்போது கோலி பந்தை அடித்தவுடன் ரசிகர் ஒருவர் “ஸ்டேடியத்திற்கு வெளியே” நின்று மைதானத்தை விட்டு பந்தை வெளியே அடியுங்கள் (அவுட் ஆப் ஸ்டேடியம்) என கத்துகிறார். அதன்பிறகு கோலி , அவர்களிடம் “நான் பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது தயவு செய்து பேசாதீர்கள்… இது மிகவும் கவனத்தை சிதறடிக்கிறது என்று சொல்ல ரசிகர்கள் கோலியிடம் பேச மாட்டோம் என்று சொல்கின்றனர்.
இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.. ரசிகர்களிடம் பேச வேண்டாம் என்று கோலி கூறிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடப்பட்டது..
During the practice Virat Kohli calmly said something like this to the fans .@imVkohli 👑 pic.twitter.com/3X5LnNTQsV
— Hemant (@hemant_18_0) October 20, 2022