Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பந்துவீசுவதற்கு முன்…… 2 அடி கிரீஸை விட்டு வெளியேறிய பாக் வீரர்…. “இக்கட்டான நேரத்திலும் கோலி செய்த செயல்”…. வைரலாகும் போட்டோ..!!

இக்கட்டான நிலையில் கூட கிரீசை விட்டு வெளியேறாத கோலியை பாராட்டும் நெட்டிசன்கள் பாக்., வீரர் செயலை விமர்சித்து வருகின்றனர்.

அக்டோபர் 23, ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 90,000 ரசிகர்கள் முன்னிலையில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இன் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வியத்தகு வெற்றியைப் பதிவு செய்தது. விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 160 ரன்கள் இலக்கைத் துரத்தியபோது முகமது நவாஸ் வீசிய கடைசி பந்தில் இந்தியாவுக்கு 2 ரன்கள் தேவைப்பட்டபோது, ​​அஷ்வின் பந்தை எதிர்கொண்டார். கோலி மறுமுனையில் நிற்கிறார்.. அந்த கடைசி பந்தை நவாஸ் லெக் திசையில் வீச அஷ்வின் அதை அடிக்காமல் விட, ஒயிடால் 1 ரன் கிடைத்தது.

பின் மீண்டும் கடைசி பந்தை வீச அஷ்வின் மிட்-ஆஃபில் அடித்து விட்டு இருவரும் ரன் ஓடி இந்தியாவை  வெற்றி பெற வைத்தனர். போட்டியில் அந்த கடைசி பந்தை வீசும் போது நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த  கோலி நவாஸ் பந்தை கையில் இருந்து ரிலீஸ் செய்தபின் தான் கோட்டிலிருந்து வெளியேறி ரன் ஓட ஆரம்பித்தார். முன்கூட்டியே கிரீஸை விட்டு ஓட நினைக்கவில்லை. இக்கட்டான நிலையில் கூட கோலி குறுக்குவழியில் யோசிக்காமல் விதியை சரியாக கடைபிடித்துள்ளார்..

ஆனால் நேற்றுமுன்தினம் பாகிஸ்தான் – ஜிம்பாப்வே மோதிய ஆட்டத்தில் பரபரப்பான நேரத்தில் கடைசி 1 பந்தில் பாகிஸ்தான் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டபோது, ஷாஹீன் அப்ரிடி அந்த பந்தை அடித்துவிட்டு 2 ரன் ஓடும்போது ரன் அவுட் செய்யப்பட்டார். 1 ரன் மட்டுமே கிடைத்தது. இதனால் 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது ஜிம்பாப்வே. அத்துடன் அத்துடன் பாகிஸ்தான் தொடர்ந்து 2 போட்டியில் தோல்வியடைந்துள்ளதால் அரையிறுதி வாய்ப்பையும் கிட்டத்தட்ட இழந்துவிட்டது.

இப்போட்டியில் ஷாஹீன் அப்ரிடி கடைசி பந்தை எதிர்கொண்ட போது நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் முகமது வசீம் நின்றுகொண்டிருந்தார். அப்போது ஜிம்பாப்வே வேகப்பந்துவீச்சாளர் எவன்ஸ் ஓடி வந்து பந்தை கையில் இருந்து ரிலீஸ் செய்வதற்கு முன்பாகவே வசீம் கோட்டை தாண்டி ஓட முயல்கிறார். அப்படியிருந்தும் பாகிஸ்தான் 1 ரன்னில் தோற்றது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோலியின் செயலை பாராட்டியும், பாகிஸ்தான் வீரரின் செயலை விமர்சித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்..

அதில் ரசிகர் ஒருவர்ட்விட்டரில் , மிகவும் விறுவிறுப்பான ஆட்டத்தின் கடைசி பந்து ஆனால் கோலி கிரீஸை விட்டு வெளியேறவில்லை. நேற்றைய (27-ஆம் தேதி) ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கும் இதே நிலைதான். ஆனால் அவர்களது நான்-ஸ்ட்ரைக்கர் 2 அடிகள் முன்னால் இருந்தார். நீங்கள் ஏமாற்றும்போது நீங்கள் இழக்கத் தகுதியானவர்.” என்று பதிவிட்டிருந்தார்..

Categories

Tech |