குக் வித் கோமாளி பிரபலம் சுனிதா விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கண்கலங்கி பேசியுள்ளார் .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருபவர் சுனிதா. விஜய் டிவி நடன நிகழ்ச்சியில் அறிமுகமான சுனிதா பல நிகழ்ச்சிகளில் நடனமாடி அசத்தியுள்ளார். ஆனால் மக்கள் மத்தியில் இவர் பிரபலமடையவில்லை. தற்போது இவர் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளார்.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான வருத்தப்படாத வாலிபர் சங்கம் நிகழ்ச்சியில் பேசிய சுனிதா ‘கடந்த பத்து வருடமாக என்னை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு எதார்த்தமாக தான் போனேன் . பத்து வருடம் நான் ஏங்கியது இப்போதான் கிடைச்சிருக்கு. எனக்கு தமிழ் தெரியாது என்ற நெகட்டிவை பிளஸ் பாயிண்டாக இந்த நிகழ்ச்சியில் காட்டுகிறார்கள். இப்போது தமிழ் மக்கள் என்னை விரும்பத் தொடங்கிவிட்டனர் . எனக்கு நிம்மதியாக இருக்கிறது’ என கண்கலங்கியபடி கூறியுள்ளார்.